கொளுத்தும் கோடையில் எண்ணற்ற நோய்களையும் சமாளிக்க வேண்டியிருக்குமே. இந்த பருவத்தில் பொதுவான நோய்களை தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். என்ன மாதிரியான கோடை நோய்கள் வரும், எப்படி எதிர்கொள்வது என்பதை இப்போது பார்க்கலாம்.
வியர்க்குரு
கோடையில் ஏற்படும் தோல் நோய்களில் ஒன்று. முட்கள் போன்ற வெப்பத்தை உண்டாக்கும். இந்த நிலை குழந்தைகளையும் பெரியவர்களையும் பாதிக்கும்.
என்ன செய்யலாம்:
கோடைக்கால நோய்களை தடுக்க, உங்கள் சருமத்தை உலர வைக்க வேண்டும். வியர்வையுடன் கூடிய ஆடைகள் மாற்றப்பட வேண்டும். சருமத்தை உலர வைக்க பவுடரை பயன்படுத்துங்கள்.
ஃபுட் பாய்ஸன்
கோடைகாலத்தில் பரவும் மற்றொரு நோய் இது. மேலும் இது அசுத்தமான உணவு அல்லது தண்ணீரை சாப்பிடுவதால் உண்டாகும் பல்வேறு வைரஸ்கள் காரனமாக உண்டாகிறது. வைரஸ்கள், பாக்டீரியாக்கள் அல்லது நச்சுகளுடன் தொடர்பு கொண்ட உணவை நீங்கள் சாப்பிடும் போது இந்த நிலை தூண்டலாம்.
என்ன செய்யலாம்:
வீட்டில் சமைத்த உணவை உட்கொள்வதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். வெளியில் உணவு சாப்பிடுவதை நிறுத்துங்கள். வெளி இடங்களில் சாப்பிடுவதாக இருந்தால் சுகாதாரமான இடங்களுக்கு செல்லுங்கள்.
சிக்கன்பாக்ஸ் (சின்னம்மை)
கோடைகால நோய்களில் மிகவும் கொடிய நோய்களில் ஒன்று இந்த சின்னம்மை. இந்த வைரஸ் நிலை உடல் முழுவதும் சிறிய திரவம் நிறைந்த கொப்புளங்களாக வெளிப்படுகிறது. இந்த நிலை பொதுவாக சிறு குழந்தைகளை பாதிக்கிறது. எனினும் சில நேரங்களில் நீரிழிவு நோயாளிகள், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு கொண்டவர்கள்,புற்றுநோய் அல்லது பிற நிலைமைகளால் பாதிக்கப்படலாம்.
என்ன செய்யலாம்:
சிக்கன் பாக்ஸ் வரும் நபர்களிடமிருந்து விலகி இருங்கள்.
முகப்பரு
வெயில் காலத்தில் ஏற்ற இறக்கமான ஹார்மோன்கள் அல்லது மற்ற வெளிப்படையான நிலைமைகள் காரணமாக உண்டாகலாம். வெப்பமான காலநிலை காரனமாக இருக்கலாம். கோடைகாலத்தில் முகப்பரு மற்றும் பருக்கள் வருவதற்கான வாய்ப்புகள் உதவும். ஏனெனில் வியர்வை உற்பத்தியானது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க செபாசியஸ் சுரப்பிகள் அதிக எண்னெய் உற்பத்தியை தூண்டுகிறது. இதனால் துளைகள் மற்றும் தோல் வெடிப்புகள் உண்டாகின்றன.
என்ன செய்யலாம்:
முகத்தை நாளைக்கு இரண்டு முறை கழுவுங்கள். சருமத்தை எண்ணெய் இல்லாமல் வைத்திருங்கள். தயிர் எலுமிச்சை சாறு, மஞ்சள் சேர்த்து வீட்டில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக் பயன்ப்டுத்துவது முகப்பருவை தடுக்க உதவும்.
கண்களில் கொப்புளங்கள்
சிவந்த ரத்தக்கண்களுடன் வீங்கி, கண்களில் வலியை எதிர்கொண்டால் கண் நோய் அல்லது கான்ஜுன்க்டிவிடிஸ் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இது தொற்று நோயும் கூட. ஒருவருக்கு வந்தால் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் வரலாம்.
என்ன செய்யலாம்:
கண்களை தொடுவதற்கு முன்பு கைகளை கழுவுவது அவசியம். பாதிக்கப்பட்ட கண்களை குளிர்ந்த நீரில் ஒரு நாளைக்கு பல முறை கழுவினால் நிவாரனம் கிடைக்கும்…
மெட்ராஸ் ஐ
நீங்கள் தூங்கி எழுந்திரிக்கும் போது, உங்களின் கண்கள் சிவப்பு நிறத்தில், வீங்கி மற்றும் கடுமையான வலியை அனுபவித்தால், உங்களுக்கு மெட்ராஸ் ஐ அல்லது விழிவெண்படல அழற்சி ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இது ஒரு தொற்றுநோயாகும். வீட்டில் ஒருவருக்கு மெட்ராஸ் ஐ வந்தால், அந்த வீட்டில் உள்ள அனைவருக்குமே இது ஏற்படலாம்.
என்ன செய்யலாம்:
எப்போதும் கண்களில் கைகளை வைக்கும் முன், கைகளை கழுவ வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்ட கண்களை அடிக்கடி குளிர்ந்த நீரால் கழுவுவதன் மூலம், வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள நோய்கள் அனைத்தும் கோடைக்காலத்தில் ஒருவருக்கு வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளவை. எனவே கவனமாக இருங்கள்.
சன் பர்ன்
சுட்டெரிக்கும் வெளியில் அதிகமாக சுற்றும் போது, சூரியனில் இருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்கள் சருமத்தில் ஊடுருவி சரும செல்களை தீவிரமாக பாதிக்கும் ஒரு நிலை தான் சன் பர்ன். இந்நிலையில் சருமமானது சிவந்திருப்பதோடு, கடுமையான எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்தும். அத்துடன் காய்ச்சல் அல்லது குளிர், குமட்டல் போன்றவையும் இருக்கும். தீவிரமான நிலையில், சருமத்தில் கொப்புளங்கள் தோன்ற ஆரம்பிப்பதோடு, சரும தோல்களும் உரிக்கப்படும்.
தடுப்பது எப்படி?
வெளியே வெயிலில் செல்லும் முன், சருமத்திற்கு பாதுகாப்பை அளிக்கும் வகையில் SPF 15-க்கு மேல் உள்ள சன்ஸ்க்ரீனை சருமத்தில் தடவ வேண்டும். மேலும் வெயில் சருமத்தில் படாதவாறு காட்டன் ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும்.